தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைக்க இரண்டாம் கட்ட நிதியுதவி



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்கு 2 இலட்சம் பெறுமதியான காசோலைகள் இன்று (27) திங்கட்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

இதன் இரண்டாம் கட்டமாக அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமது வீடுகளை பூரணப்படுத்துவதற்காக இந்நிதி இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர் சபீஸ் கான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் எஸ். இம்தியாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :