அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முஸ்லிம் செவிலியர்கள் தங்கள் கலாசாரத்திற்கு ஏற்ப சீருடைகளை அணிவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பல காலமாக தீர்க்கப்படாமல் உள்ளது. இதன் காரணமாக முஸ்லிம் பெண்கள் தாதியர் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தும் அங்கு செல்லாமல் தவிர்த்து வந்த நிலையை காண்கிறோம்.
முழங்கால் வரையான தாதியர் ஆடை என்பது கலாசார பிடிப்புள்ள முஸ்லிம் பெண்களை இச்சேவையிலிருந்து தூரப்படுத்தியது. இதேகான தீர்வை கடந்த காலங்களில் அமைச்சரவை அமைச்சர்களாக இருந்த முஸ்லிம்கள் எவரும் பெற்றுத்தரவில்லை. அனைவரும் சமூக சிந்தனை இன்றி தம் சுயநலனை மட்டும் கருத்திற்கொண்டு வாழ்ந்தனர்.
தற்போது சிவில் அமைப்புக்களுடனான அமைச்சரின் சந்திப்பில் இவ்வாறு முஸ்லிம் தாதியர் தம் கலாசாரத்துக்கு ஏற்ப ஆடை அணிய சட்டப்படி தடையில்லை என்ற அமைச்சரின் தெளிவூட்டல் பாராட்டுக்குரியது.

0 comments :
Post a Comment