வரலாற்றுச் சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாவடிப்பள்ளி அல் - அஸ்ரப் மகாவித்தியாலய மாணவர்களுக்கு வாழ்த்துக்ள்..!




- அஹமட் சாஜித் -
வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சைப் பெருபேருகளின் அடிப்படையில், மாவடிப்பள்ளி கமு/அல் - அஸ்ரப் மகாவித்தியாலயத்திலிருந்து தோற்றிய 49 மாணவர்களில், 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெருபேறுகளைப் பெற்று, சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேரத்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்..

இவ்வாறு ஒரே தடவையில் 07 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெருபேறுகளைப் பெருவது என்பது மாவடிப்பள்ளி வரலாற்றில் இதுவே முதற் தடவையாகும். இதற்கு முன்பு 05 மாணவர்கள் ஒரே தடவையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பேருபேறுகளைப் பெற்றதுவே சாதனையாகக் காணப்பட்டது.

மாவடிப்பள்ளி என்பது ஒரு சிறிய கிராமமாகும். இங்கு ஒரே ஒரு பாடசாலை கமு/அல் - அஸ்ரப் மகாவித்தியாலயம் மாத்திரமே காணப்படுகின்றது. இப் பாடசாலையானது 1945/06/25 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இதுவரை சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றது. இங்கு தரம் 1 தொடக்கம் சாதாரணதரம் வரை (O/L) கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. மொத்தமாக இப்பாடசாலையில் 700 மாணவர்கள் கல்வி கற்றுவருகின்றனர். இவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்காக, அவிருத்தி உத்தியோகத்தர்களோடு சேர்ந்து மொத்தமாக 42 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.

பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒன்று இரண்டு என்ற கணக்கில் மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடையும் விதம் காணப்பட்ட போதிலும் கடந்த காலத்தில் 05 மாணவர்கள் என்ற சித்தியடையும் விதம் உயர்வுபெற்றதுடன், இவ்வருடம் பாடசாலை வறலாற்றையே மாற்றியமைத்து 07 மாணவர்கள் ஒரே தடவையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ். எனவே இம்மாணவர்களுக்கு கற்பித்தல் செய்பாடுகளை செய்து ஊக்குவித்த பாடசாலை ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியறிதழ்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

குறிப்பாக இப் பாடசாலையானது குருகிய காலம் அதிபர் சரியாக அமையாததாலும், ஒரு சில ஆசிரியர்களின் பிழையான செயற்பாடுகளினாலும் பாரிய பின்னடைவை நோக்கி சரிவடைந்து காணப்பட்டது. அதன் பிற்பாடு பாடசாலையின் நலனைக் கருத்திற்கொண்டு ஒரு சில பெற்றோர்கள், இளைஞர்களின் முயற்சியின் பலனாக வேறு ஒரு பாடசாலையில் கடமையாற்றிய ரஜாப்டீன் ஆசிரியர் அவர்களை அனுகி, பல போராட்டங்களுக்கு மத்தியில் இப் பாடசாலைக்கு அதிபராகக் கொண்டு வந்து அவருக்கு பக்கபலமாக இருந்ததன் பிரதிபளிப்பு தற்போது இப்பாடசாலை சாதனைகளை நிகழ்த்துகின்றது. இந்த நேரத்தில் அதிபர் ரஜாப்தீன் ஆசிரியர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், குறிப்பாக இம் முறை புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள், இலவச செயலமர்வுகளை நடாத்திய தனவந்தர்கள், மற்றும் பரீட்சைக்கு முன்னதாக இலவச செயலமர்வை நடாத்திய காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ARM. ஹில்மி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மேலும் இப் பாடசாலையின் பாடசாலை அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கத்தினர் சித்தியடைந்த மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வை அவசரமாக நடாத்தினால் சிறப்பாக இருக்குமென்பதுடன், பாடசாலை அதிபருக்கு பக்கபலமாக இருந்து பாடசாலையின் முன்னேற்றத்திற்கு உதவுமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இப் பாடசாலையானது பௌதீகரீதியாக அபிவிருத்தியடைந்த போதிலும், இன்னும் பல குறைபாடுகளுடன் காணப்படுகின்றது. நவீன கற்பித்தலுக்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள், நவீன கற்பித்தல் செயற்பாட்டுக்குத் தேவையான சாதனங்கள், குறிப்பாகச் சொல்லப்போனால் Projector இதுவரை இப்பாடசாலைக்கு இல்லாத குறையாக காணப்படுகின்றது. எனவே இப் பாடசாலையில் கல்வி கற்ற பல மாணவர்கள் நாடறிந்த வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், சட்டத்தரணிகளாகவும், ஆசிரியர்களாகவும், தொழிலதிபர்களாகவும், வெளிநாடுகளில் முக்கிய பொறுப்புகளிலும் பணம் படைத்தவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே நீங்கள் கற்ற பாடசாலையை ஒரு கணம் சிந்தித்து உங்களால் முடிந்த உதவிகளை வழங்கி இப் பாடசாலையில் முன்னேற்றத்திற்கு உதமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :