இதனைக் குறிப்பிட்டு கட்சித் தலைவர் முஸ்நத் முபாறக் தெரிவித்ததாவது:
"இப்பரீட்சை குழந்தைகளின் கல்வி பயணத்திற்கு உகந்ததல்ல. மிகவும் இளமையான வயதிலேயே, பிள்ளைகள் பரீட்சை வெற்றிக்காக மன அழுத்தத்தில் மாட்டிக் கொள்கிறார்கள். இந்த மன அழுத்தம், பெற்றோர்களிடையேயும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. சில நேரங்களில், இந்த அழுத்தத்தால் பெற்றோர் விரக்தியடைந்து, பரீட்சையில் தோல்வியடைந்த பிள்ளைகள் தற்கொலை செய்யும் செய்திகளும் சமூகத்தில் அதிகரித்து வருகின்றன. இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்."
அரசாங்கம் உண்மையில் ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவி செய்ய விரும்பினால், அதற்கான மற்ற வழிகளைத் தேர்வு செய்யலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"கிராம சேவகர் மற்றும் கல்வி அதிகாரிகள் மூலம் உண்மையான தேவைமிக்க மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு நேரடியாக புலமைப்பரிசில் உதவிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஒரே பரீட்சை மூலம் அனைத்து மாணவர்களையும் போட்டியில் ஈடுபடுத்துவது, குழந்தைகளின் மனநலத்திற்கும் சமநிலைக்குரிய கல்வி வாய்ப்புகளுக்கும் எதிரானது," என்றார் முபாறக்.
இந்தியிலும் இலங்கையிலும் சமீப காலமாக மாணவர்களின் மனநலம் குறித்த விழிப்புணர்வுகள் அதிகரித்து வரும் நிலையில், இளவயதிலேயே பரீட்சை மையமாக்கப்படும் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் போட்டிப் பரீட்சையை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும், தேவையெனில் அந்த பரீட்சையை மாணவர்கள் முழுமையாக வளர்ந்திருக்கும் ஆண்டு எட்டில் (8ம் ஆண்டு) நடத்தும் வகையில் மாற்றம் செய்யலாம் எனவும் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

0 comments :
Post a Comment