இவ்விழா, பௌண்டேசனின் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக கல்வியை தொடரும் மாணவர்களின் பொருளாதார சவால்களை தணித்து, அவர்களின் கற்றல் மற்றும் ஆராய்ச்சி பயணத்தை வலுப்படுத்தும் நோக்குடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த 14ஆம் கட்டத்தில், நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பல மாணவர்களுக்கு மடிக்கணனிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் நன்றியுணர்வைத் தெரிவித்துக்கொண்டு, கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தில் இத்தகைய ஆதரவு முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டனர்.
பௌண்டேசன் ஆரம்பித்த இந்த முயற்சி கடந்த ஆண்டுகளிலிருந்து இடைவிடாமல் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பல நூறு மாணவர்கள் இதுவரை இத்திட்டத்தின் பயனை அடைந்துள்ளனர். “கல்வியே சமூக முன்னேற்றத்தின் முதன்மை கருவி என்பதால், இத்தகைய ஆதரவுகள் மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக்கும்” என்றும் “நாட்டின் இளைஞர்கள் தான் நாளைய தலைவர்கள். அவர்கள் கல்வியில் முன்னேறுவதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகளை நாம் வழங்க வேண்டும். அதற்கான சிறிய பங்களிப்பாகவே இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது” எனவும் இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
விழாவில் பல சமூக பிரதிநிதிகள், பௌண்டேசனின் உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.









0 comments :
Post a Comment