நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி; அவர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்! குச்சவெளி தவிசாளர் முபாரக் தெரிவிப்பு!



அபு அலா-
டந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட புல்மோட்டையைச் சேர்ந்த ரிஷான் என்பவரை நானும், எனது சகோதரரும் கொலை செய்யப்போவதாகவும், அவரை மிரட்டியதாகவும் கூறி ஒரு பொய்யான வழக்கொன்றை தொடுத்துள்ளதுடன் எனது நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல பொய்யான கட்டுக்கதைகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குச்சவெளி பிரதேச சபைத் தவிசாளர் எ.முபாரக் தெரிவித்தார்.

இதுதொடர்பாக இன்று (27) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரித்தார்.

எனக்கும் எனது சகோதரருக்கும் எதிராக தொடரப்பட்ட பொய்யான வழக்கு கடந்த 25 ஆம் திகதி குச்சவெளி நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இவ்வழக்கு விசாரணைக்காக நாங்கள் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்நிறுத்தப்பட்டோம் என்றும், மீண்டுமொரு பொய்யான வதந்தியையும் பரப்பியுள்ளனர். இவ்வாறான இச்செயற்பாடுகளானது, அவர்களின் அரசியல் சுய இலாபத்தினை கருத்திற்கொண்டே அவரும் அவர் சார்ந்த குழுவினரும் முன்னெடுத்து வருகின்றனர். இவ்விடயம் பெரும் கவலையளிப்பதாக குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாரக் மேலும் தெரிவித்தார்.

உண்மை எதுவென்றால், குறித்த நபர் மற்றும் அவர் சார்ந்த குழுவினர், எங்கள் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், மக்கள் மத்தியில் இருக்கின்ற எனது நற்பெயருக்கு ஒரு கலங்கத்தை எற்படுத்தும் மிகக் குறுகிய சிந்தனையிலும், தங்களின் அரசியலில் இலாபம் தேடும் நோக்கிலேயே இந்தப் பொய்யான வழக்கைத் தொடுத்தது மாத்திரமல்லாமல், எங்கள் மீது பொய்யான வதந்திகளையும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.

இருந்தாலும், எங்கள் இருவர் மீது தொடரப்பட்ட பொய்யான வழக்குத் தாக்கலுக்கு நாங்களாகவே நீதிமன்றிற்குச் சென்று ஆஜரானோம். எங்களை பொலிஸார் யாரும் கைது செய்யவும் இல்லை. நாங்கள் யாரையும் கொலை செய்வதாக மிரட்டவும் இல்லை.
நான் சட்ட ஒழுங்கு விதிமுறைகளை மதிப்பவன். அது மாத்திரமல்லாமல் தவிசாளராக மூன்றுமுறை பதவி வகித்துள்ளேன். அதனால் சட்ட ஒழுங்கு விதிமுறைகள் பற்றிய அறிவு எனக்கு நன்கு தெரியும் என்பதனால், எங்கள் மீது தொடரப்பட்ட அந்த வழக்குக்கு அழைப்பாணைக்கு தலை சாய்க்கும் வகையில் நீதி மன்றிற்குச் சென்றோம். இதுதான் உண்மையாகும்.

எங்களுக்கும், எங்கள் கெளரவத்திற்கும் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பொய்யான வழக்கையும், பொய்யான பரப்புரைகளையும் செய்து வருகின்றவர்களுக்கெதிராக மான நஷ்டஈடு வழக்கொன்றை நான் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :