வாக்குறுதியை நிறைவேற்றி முதல் மாத கொடுப்பனவை மக்களுக்கு அன்பளிப்புச் செய்த பிரதேச சபை உறுப்பினர் ஏ.நளீர்



நூருல் ஹுதா உமர்-

பிந்தங்கிய பிரதேசமாகக்காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த முதல் மாத கொடுப்பனவை சாளம்பைக்கேணி - 04 மூன்றாம் வட்டாரத்தில் ஒரு குடும்பத்திற்கு இன்று (09) அன்பளிப்பு செய்துள்ளார்.

இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். அம்ஜத் தலைமையில் இடம்பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட தேவையுடைய குடும்பத்திற்கு குறித்த பணத்தொகையை கையளிக்கும் நிகழ்வில் ஜும்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் மௌலவி முஹமட் ரிஸ்வான் உட்பட பிரமுகர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :