ஓய்வு பெற்றுச் சென்றார் பிரதி அதிபர் எச். எம். ரசீன்



37 வருட கால கல்விப் பணியிலிருந்து பிரதி அதிபர் எச். எம். ரசீன் நேற்றைய தினம் (18) ஓய்வு பெற்றுச் சென்றார்.

சஞ்சிதாவத்தையில் வசித்து வரும் இவர் மன்னார், சிலாவத்துறையை பிறப்பிடமாக கொண்டவர் இவர் சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலையில் தனது முதலாவது ஆசிரியர் நியமனத்தை பெற்று 1988 ஆம் ஆண்டு 08 ஆம் மாதம் 06 ஆம் திகதி தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் நுரைச்சோலை, கொய்யாவாடி, ஆலங்குடா போன்ற பாடசாலைகளில் அதிபராக, பிரதி அதிபராக தனது கடமைகளை திறம்பட செய்து இருந்தார்.

இவருக்கான பிரியாவிடை வைபவம் நுரைச்சோலை தேசிய பாடசாலையில் நேற்றைய தினம் பாடசாலையின் அதிபர் M.I இம்ரான் கான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபரான S.H.M நபீஸ், உப அதிபர்களான N.T.M தாரிக், M. இக்பால் உட்பட பகுதி தலைவர்கள், ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :