இன்று சிறப்பாக நடைபெற்ற சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு.



வி.ரி. சகாதேவராஜா-
லகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 78 ஆவது மகாசமாதி தின நிகழ்வு இன்று சனிக்கிழமை (19.07.2025) காலை அவர் அவதரித்த காரைதீவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

காரைதீவு விபுலாநந்தர் ஞாபகார்த்தப் பணி மன்றத்தினர் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு இந் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்..
திருமுன்னிலை அதிதியாக கண்ணகி அம்மன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ பிரியதர்ஷன் குருக்கள் கலந்து நந்திக் கொடி ஏற்றி சிறப்பித்தார்.

நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக ஓய்வு நிலை சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளரும் பணி மன்ற ஆலோசகருமான வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பிரபமுகர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சுவாமி விபுலாநந்தர் கற்கை நிலைய மாணவர்களின் கலை நிகழ்வுகள் சிறப்புரைகள், கலை நிகழ்வுகள் ஆகியவை இடம்பெற்றன .

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :