வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவு: அட்டாளைச்சேனை MOH களத்துக்கு விஜயம்



நூருல் ஹுதா உமர்-
டந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளது. குறித்த அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் உள்ளனர்.

குறித்த அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமைத்த உணவினை வழங்கும் வேலைத்திட்டமொன்றினை அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்னெடுத்துள்ளது.

குறித்த உணவானது அட்டாளைச்சேனை SMI நிறுவனத்தின் வளாகத்தில் சமைக்கப்பட்டு வருகிறது. மேற்படி இடத்துக்கு விஜயம் செய்த அட்டாளைச்சேனை மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. நௌபல் நிலமைகளை பார்வையிட்டதுடன் உணவு தயாரிப்பு பணிகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் முன்னெடுக்கப்படுவதனை உறுதிப்படுத்தினார்.

தனவந்தர்களின் உதவியுடன் அட்டாளைச்சேனை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலினால் சமைக்கப்படும் இந்த உணவானது பிரதேச செயலாளரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கிராம உத்தியோகத்தர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக பள்ளிவாசல் தலைவரும் விரிவுரையாளருமான ஏ.எல்.அனீஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :