மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய வேலாயுதம் அரச பணியிலிருந்து ஓய்வு!



அபு அலா -
வெளி வள திணைக்களத்தில் மேலதிக பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றி வந்த வேலாயுதம் மகேந்திரராஜா கடந்த 25 ஆம் திகதி அரச பணியிலிருந்து ஓய்வுபெற்றார்.

1990 ஆம் ஆண்டு பட்டதாரி முகாமைத்துவ பயிலுனராக
அரச சேவையில் இணைந்து கொண்ட இவர், 1992 இல் திட்டமிடல் உத்தியோகத்தராக கடமையாற்றிய பின்னர் உதவி திட்டமிடல் பணிப்பாளராக கடமையாற்றினார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் NECORD, CAARP கருத்திட்டங்களில் கருத்திட்ட இணைப்பாளராகவும், உலக வங்கியின் PIP மற்றும் GIZ ஆகிய நிறுவனங்களில் கடமையாறினார்.

மேலும், பிரதிப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று வெளி வளத் திணைக்களத்தில் (Department of External Resources) கடமையாற்றிய பின்னர், கிழக்கு மாகாண திட்டமிடல் செயலகத்தில் பிரதிப் பிரதம செயலாளராக 2008 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார். அக்காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கென சிறந்த சேவையாற்றினார்.

பின்னர் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சில் (Ministry of National Integration & Reconciliation) திட்டமிடல் பணிப்பாளராகவும், நிதி ஆணைக்குழுவில் பணிப்பாளராகவும் பல பதவிகளை வகித்துவந்த வேலாயுதம் மகேந்திரராஜா, தனது ஓய்வு நிலை வரும் வரை வெளி வள திணைக்களத்தில் (Department of External Resources, Ministry of Finance) மேலதிக பணிப்பாளர் நாயகமாக
கடமையாற்றி கடந்த 25 ஆம் திகதி அரச பணியிலிருந்து ஓய்வு நிலையைடைந்தார். அவரின் அரச சேவையை பாராட்டி திணைக்கள அதிகாரிகள், உத்தியேகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோரினால் பாராட்டி கெளரவிக்கப்பட்டு, நினைவுப் பரிசில்களும் வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :