இஸ்லாமாபாத் கழிவுநீர் பிரச்சினையை தீர்க்க கல்முனை மாநகர சபை அவசர நடவடிக்கை.!



அஸ்லம் எஸ்.மெளலானா-
ல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் நீண்ட காலமாக நிலவி வருகின்ற கழிவுநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கல்முனை மாநகர சபை விஷேட வேலைத் திட்டம் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (13) முன்னெடுத்துள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக இதற்கான அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட
இஸ்லாமாபாத் வீட்டுத் தொகுதிக்கான கழிவுநீரகற்றல் முறைமையில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகள் காரணமாக அங்குள்ள வீடுகளில் இருந்து கழிவு நீர் சேகரிப்புத் தாங்கிக்கு வருகின்ற கழிவு நீர் சீராக அகற்றப்படாமல் அப்பகுதி முழுவதும் பரவுவதால் பாரிய துர்நாற்றமும் சுற்றுச்சூழல் பாதிப்பும் சுகாதார சீர்கேடுகளும் ஏற்படுகின்றன.
இதனால் குறித்த வீட்டுத் தொகுதியில் வாழ்கின்ற மக்கள் மாத்திரமல்லாமல் சுற்றிவரவுள்ள அனைத்து மக்களும் பெரும் அசெளகரியங்களையும் டெங்கு உள்ளிட்ட நோய் அபாயங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனைக் கருத்தில் கொண்டே தமது பொறுப்புக் கூறலுக்கு அப்பாற்பட்ட இப்பாரிய பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு வழங்க கல்முனை மாநகர சபை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்போது பிரதான தாங்கியில் இருந்து சுத்திகரிப்புக்காக செல்கின்ற கழிவு நீர்க் குழாய் பாதையில் அமைந்துள்ள பல துணைத் தாங்கிகள் திறக்கப்பட்டு, அவற்றில் நிரம்பியிருந்த பிளாஸ்டிக் போத்தல்கள், பெம்பஸ்கள் மற்றும் திண்மக்கழிவுகள் அகற்றப்பட்டும் திரவங்கள் வெளியேற்றப்பட்டும் சீர் செய்யப்பட்டது.
இதற்கு முன்னரும்.அடிக்கடி இப்பிரச்சினை தலைதூக்குகின்ற சந்தர்ப்பங்களில் பல தடவைகள் கல்முனை மாநகர சபை இவ்விடயத்திற்கு உதவி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக முறையான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். இது தொடர்மாடி வீட்டுத் தொகுதி என்பதால் அதன் பராமரிப்புக்கென ஆதன முதலீட்டுக்குழு (Condominium Committee) ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலமே அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கல்முனை, இஸ்லாமாபாத் தொடர்மாடி வீட்டுத் தொகுதியில் கடந்த பல வருடங்களாக இக்குழு செயற்பாட்டில் இல்லை எனத் தெரிய வருகிறது. இது விடயத்தில் சம்மந்தப்பட்ட தரப்பினர் கூடிய கவனம் செலுத்தி, கொண்டோமினியம் குழுவை செயற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :