சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேராளர் மாநாடு: பல முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்!



ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் 12வது பேராளர் மாநாடு 2026 பெப்ரவரி 15ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, சாய்ந்தமருது கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கட்சியின் தலைவர் முஸ்னத் முபாறக் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், கட்சியின் நிர்வாக சபை உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், மகளிர் அமைப்புப் பிரதிநிதிகள், பிரதேச அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்தனர்.

மாநாட்டின் முக்கிய உரையை கட்சியின் பொதுச் செயலாளர் இர்பான் முஹிடீன் அவர்கள் நிகழ்த்தினார். தனது உரையில் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல், சமூக – பொருளாதார சவால்கள், சிறுபான்மையினரின் உரிமைகள், பெண்களின் அரசியல் பங்கேற்பு, இளைஞர் சக்தி வளர்ச்சி உள்ளிட்ட விடயங்களை விரிவாக எடுத்துரைத்தார்.

மேலும், ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரசின் ஏற்பாட்டில் சமீபத்தில் நடத்தப்பட்ட பெண்களுக்கான அரசியல் தலைமைத்துவ பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள் இம்மாநாட்டின் போது வழங்கி வைக்கப்பட்டன. இது பெண்களின் அரசியல் விழிப்புணர்வையும், தலைமைத்துவத் திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்பட்டது.

மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
நாட்டின் தேசிய மட்டத்தில் பின்தங்கியுள்ள கிராமங்களில் வாழும் பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளை, அரசு இன – மத பேதமின்றி வழங்க வேண்டும்.
டித்தா புயலால் பாதிக்கப்பட்டு இன்னமும் நிரந்தர வீடுகள் கிடைக்காத மக்களின் முழு விபரங்களையும் அரசு தேசிய பத்திரிகைகளில் வெளியிட்டு, அவர்களுக்கான வீடுகள் விரைவில் வழங்கப்பட வேண்டும்.
நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக, அனைத்து இனங்களுக்கும் சமமான அதிகாரங்கள் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.
சுனாமி வீடமைப்பு திட்டத்தின் கீழ், சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னமும் வீடு கிடைக்காத மக்களுக்கு உடனடியாக வீடுகள் வழங்கப்பட வேண்டும்.
2010ஆம் ஆண்டிற்கு பின் அரச பாடசாலைகளில் இஸ்லாம் பாடம் கற்பிக்க மௌலவி ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலை தொடர்வதை கருத்தில் கொண்டு, அரசு உடனடியாக மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்க வேண்டும்.
ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் போது, பெண் ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிக்கும் தொகுதிகளுக்குள் பணியிடங்கள் வழங்க கல்வி அமைச்சு அதிக கவனம் செலுத்த வேண்டும்.
கிழக்கு மாகாண விவசாயிகளை பாதிக்கும் வெள்ள நீரை கட்டுப்படுத்தும் வகையில், குளங்கள் மற்றும் நீரோடைகள் புனரமைக்கப்பட வேண்டும்.
பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
நாட்டில் பெண்களுக்கான தேசிய பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும்.
நாட்டில் இனங்களுக்கிடையே ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் ஊடகவியலாளர்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்.

2026ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பட்டியல்:

இம்மாநாட்டின் போது கட்சியின் புதிய நிர்வாகிகள் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டனர். அவர்களின் விபரங்கள் பின்வருமாறு:


தலைவர்: எம். முஸ்னத்
பொதுச் செயலாளர்: இர்பான் மொஹிடீன்
பொருளாளர்: ஏ. எம். ஏ. அத்னான்
Chairman (தலைவர்): ருஷ்தி நசீர்
உப தலைவர்: சமாம் அத்னான்

உப தலைவர்கள்:
சி.எம்.வை. இஸ்ஸாதீன்
ஜெஸ்மின் மௌலவி

உப செயலாளர்: எம். மரீர்
உப பொருளாளர்: முகம்மது பைசல்
தேசிய அமைப்பாளர்: எஸ்.எல். றியாஸ்
பிரச்சார செயலாளர்: ஆர். சசிகுமார்

மகளிர் விவகார ஒருங்கிணைப்பாளர்கள்:
பாதிமா பர்வீன்
திருமதி ஹானன்

மகளிர் விவகார உதவி ஒருங்கிணைப்பாளர்கள்:
சிவயோஹினி
எவ். சிஹாமா

செயற்குழு உறுப்பினர்கள்:
கே. எம். ஹாரூன்
எஸ். பத்மாவதி
ஏ. எம். எம். றபீக்
ஏ. எல். அன்சார் (முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்)
எம். ஆர். எம். ரஷாத்
ஏ. ஸக்கீ
திருமதி நிஷாந்தி
முகம்மத் முஜாஹித்


இந்த மாநாடு, கட்சியின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், சமூகநலன், பெண்கள் முன்னேற்றம், இளைஞர் வேலைவாய்ப்பு, நல்லிணக்கம் ஆகிய துறைகளில் வலுவான செயற்பாடுகளை முன்னெடுக்க உறுதியான அடித்தளமாகவும் அமைந்தது.







 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :