மாதத்துக்கு 5 மடிக்கணினிகள் வீதம் தொடர்ந்து 20 மாதங்கள் வழங்கப்பட்டதன் மூலம், மொத்தம் 100 மடிக்கணினிகள் மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு நேரடியாக வழங்கப்பட்டு, இத்திட்டத்தின் 20வது கட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி முன்னேற்றம், டிஜிட்டல் சமத்துவம் மற்றும் இளைஞர் திறன் மேம்பாடு ஆகியவற்றை முதன்மை இலக்குகளாகக் கொண்டு தொடர்ச்சியான சமூக சேவைகளை முன்னெடுத்து வரும் ஹாஷிம் உமர் பவுண்டேஷன், இந்த முயற்சியின் மூலம் தொழில்நுட்ப வசதிகளை எளிதில் அடைய முடியாத மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
20 மாதங்கள் நீடித்த இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 100 மடிக்கணினிகள், மாணவர்களின் கல்வியில் காணப்படும் டிஜிட்டல் இடைவெளியை குறைக்கும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய சிரேஷ்ட ஒலி–ஒளி பரப்பாளர் யாக்கூப், சமூக சேவையில் மறக்கமுடியாத தடம் பதித்த கலாநிதி பதியுதீன் மஹமூத் மற்றும் எம். எச். எம். அஷ்ரப் ஆகியோரின் பணிப் பாரம்பரியத்துடன் ஒப்பிடத்தக்க வகையில் புரவலர் ஹாஷிம் உமர் பார்க்கப்பட வேண்டியவர் எனக் குறிப்பிட்டார்.
“நான்கு சுவர்களுக்குள் இவ்வாறான ஒரு பெரிய சமூகப் பணித் திட்டத்தை அமைதியாக நடத்துவது, அவர்களின் வலிமையான மனப்பக்குவத்தையும் எளிமையையும் காட்டுகிறது. 100 மடிக்கணினிகளுக்கே சுமார் 2 கோடி ரூபா செலவாகியிருக்கும். இவ்வாறான பணிகளை தொடர்ச்சியாகச் செய்பவர்கள் மிக அரிது,” என அவர் தெரிவித்தார்.
மேலும், “எனக்கும் ஹாஷிம் உமர் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு 40 ஆண்டுகளுக்கு மேலானது. சமூக சேவையில் அவர்களின் அர்ப்பணிப்பு புதிதல்ல; இது நீண்டகால பாரம்பரியத்தின் தொடர்ச்சியே,”
எனவும் யாக்கூப் நினைவுகூர்ந்தார்.
நிகழ்வில் பிரபல இசை அமைப்பாளர் சுருதி பிரபா, நிறுவன பணிப்பாளர் மரியம் ஹாஷிம் உமர், மேமன் கவி, எழுத்தாளர் ராஜா மேத்தா, ஊடகத் துறை அமைச்சின் புலனாய்வு அதிகாரி ஜிப்றியா இப்ராஹிம், தமிழன் பத்திரிகை செய்தி ஆசிரியர் ஜௌபர், சுயதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தமிழ் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் சார்ந்த ஊடகவியலாளர் அப்சரா ஜெயவரதன, தென்கிழக்கு பல்கலைக்கழக ஊடகப் பிரிவின் உறுப்பினர் அமீர், ஊடகவியலாளர் சந்திரிக்கா நிரோஷன், அமைப்பாளர் அர்க்கம் சுலைமான், ஷாம் பூஸ்டர் பணிப்பாளர் ஹஸ்னா, ரிகாஸா மஸாஹீர் டிரேடர்ஸ் உரிமையாளர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மடிக்கணினிகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள்
எஸ். திலானி – தம்பிலுவில்
ஏ. எம். ஆதில் – சாய்ந்தமருது
யாசிரு பண்டார நாயக்க – பன்னிப்பிட்டிய
ஜே. ஆயிஷா – ஹெட்டிப்பொல
எம். எம். எப். இல்மா – நிந்தவூர்
மடிக்கணினிகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், இந்த ஆதரவால் தங்கள் கல்வி கனவுகளை மேலும் உறுதியாக முன்னெடுக்க முடியும் என நன்றியுடன் தெரிவித்தனர்.
சமூக மாற்றத்திற்கான உறுதியான முதலீடு அமைதியான சேவையும், அளப்பரிய அர்ப்பணிப்பும் கொண்ட சமூக சேவையாளர் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களின் இந்த 20 மாதத் தொடர்ச்சியான முயற்சி, எதிர்கால சமூக மாற்றத்திற்கான வழிகாட்டியாகவும், கல்வி வளர்ச்சிக்கான உறுதியான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
கல்வியை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் இத்தகைய நீடித்த திட்டங்கள், நாட்டின் அறிவார்ந்த மனித வளத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்காற்றும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.



































0 comments :
Post a Comment