இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு வீடு அமைக்க நடவடிக்கை



பாறுக் ஷிஹான்-
பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று(2) நடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் குறித்த வீட்டிற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது.

இதன் போது இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்னவினால் இன்று கல் நாட்டி வைக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் அம்பாரை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் களுஆராச்சி உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இது தவிர கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அமலதாசன் இகிராம உத்தியோகத்தர் சுந்தரராஜன் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :