கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு 60 இலட்சம் ரூபாய் நிதி அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பள்ளிவாசல் மேல் மாடி வேலைகளுக்காக வேண்டி சமூக செயற்பாட்டாளர் அல்ஹாஜ் எம்.எம்.ஹலால்தீனிடம் பள்ளிவாசல் நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கினங்க அவரது முயற்சியால் லண்டனில் வசிக்கும் அல்ஹாஜ் பைஸல் தாவூத், டொக்டர் அஹமத் முகைதீன் கலந்தர் லெப்பை, அல்ஹாஜ் டொக்டர் பியாஸ் லெப்பை ஆகியோர்கள் ஒன்றிணைந்து 60 இலட்சம் ரூபாய் நிதியினை அன்பளிப்பு செய்துள்ளனர்.
குறித்த வேலையை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (2) இஷா தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பள்ளிவாசலின் தேவையை நிவர்த்தி செய்ய நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் பள்ளிவாசல் நிருவாகத்தினர் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment