வவுனியாவில் இலக்கியச் சந்திப்பு



“இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்” என்ற தொனிப்பொருளில் இரு நூல்கள் குறித்த கருத்துரைகள் மற்றும் கலந்துரையாடல்

வவுனியாவில் இலக்கிய ஆர்வலர்களை ஒன்றிணைக்கும் வகையில் புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் வவுனியா கிளையினரும் விஜய் பதிப்பகமும் இணைந்து வழங்கும் “இலக்கியச் சந்திப்பு” நிகழ்வு எதிர்வரும் 29.08.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை வவுனியா சிறுவர் பூங்கா, குடியிருப்பு பகுதியில் நடைபெறவுள்ளது.

“இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்” என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சமகாலத் தமிழ் இலக்கியத்தில் முக்கியத்துவம் பெறும் இரு நூல்கள் தொடர்பான கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

இதன்போது, தமிழ்மணி அகளங்கனின் “முற்றத்துக் கரடி” என்ற நூல் தொடர்பான கருத்துரையை வனிதா சேனாதிராசா வழங்கவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, குடத்தனை உதயனின் “அகதியின் நாட்குறிப்பு” என்ற நூல் தொடர்பான கருத்துரையை லிசாந்தினி கிருஷ்ணராஜ் வழங்கவுள்ளார்.

இரு நூல்களிலும் வெளிப்படுத்தப்படும் வாழ்வியல் அனுபவங்கள், சமூகச் சூழல்கள், மனித உணர்வுகள் மற்றும் இலக்கியப் பார்வைகள் தொடர்பில் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வகையில் நிகழ்வின் சிறப்பு அம்சமாக இரு நூல்களையும் அடிப்படையாகக் கொண்ட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு இலக்கிய வாசிப்பு மற்றும் விமர்சனப் பார்வையை ஊக்குவிப்பதுடன், எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் கலைத்துறையினருக்கு கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்கான சிறந்த தளமாகவும் அமையவுள்ளது.

இலக்கியத்தின் வழியாக வாழ்வியல் அனுபவங்களையும் சமூகப் பார்வைகளையும் புரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் தலைவி சிவகெளரி (சுடரி) மற்றும் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இலக்கியத்தை நேசிப்போம்; வாசிப்பையும் உரையாடலையும் வளர்ப்போம் என்ற நோக்கில் நடைபெறும் இச்சந்திப்பு வவுனியாவின் இலக்கியச் செயற்பாடுகளுக்கு மேலும் வலுசேர்க்கும் நிகழ்வாக அமையவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :