இலங்கையின் சுகாதார சேவைகளின் வரலாறும், கிழக்குக் கரையின் சுகாதாரமும்.- டாக்டர் கியாஸ் சம்சுடீன்தொடர் 11
னநோயாளர்களுக்கான மருத்துவ சேவையில் பாரிய பங்களிப்பை செய்த முல்லேரியா மனநல வைத்தியசாலை 1958 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது சேவையின் நூற்றாண்டை நிறைவு செய்தது .

அந்த வருடம் இலங்கையில் காணப்பட்ட வெவ்வேறு தரத்திலான 398 வைத்தியசாலைகளும் மொத்தமாக 28,788 படுக்கைகளை கொண்டிருந்தன.

இதில் மொத்த மனநல வைத்தியசாலைகளும் 2576 படுக்கைகளை பகிர்ந்துகொண்டன.

அதேவேளை 6 நிறுவனங்களை கொண்ட கொழும்பு குழும மருத்துவமனைகள் 2639 படுக்கைகளையும், மாகாண மருத்துவமனைகள் 3393 படுக்கைகளையும், ஆதார வைத்தியசாலைகள் 2686 படுக்கைகளையும் கொண்டிருந்தன. அதிகூடிய 12,168 படுக்கைகளை

மாவட்ட வைத்தியசாலைகள் கொண்டிருந்தன. இவை தவிர மொத்தம் 6,642 படுக்கைகள் கொண்ட காசநோய், தொழுநோய், தொற்று நோய் மற்றும் சிறைக் கைதிகளுக்கான வைத்தியசாலை என சிறப்பு நிறுவனங்களும் காணப்பட்டன.

எஸ்டேட் சுகாதார சேவை

1958 இல் தோட்டங்களின் எண்ணிக்கை 2,587 ஆக இருந்தது.

தோட்ட அதிகாரிகள் 108 தோட்ட மருத்துவமனைகளையும் 360 தோட்ட மருந்தகங்களையும் பராமரித்து வந்தனர்

கொழும்பு குழும மருத்துவமனைகள்

இலங்கையில் கிடைக்கக்கூடிய மிக மேம்பட்ட அனைத்து சிறப்பு மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனைகள் , இக் குழுவில் உள்ளன. மேலும் இலங்கைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மருத்துவ கற்பித்தல் பிரிவாகவும் இருக்கிறது.

1960 ஆம் ஆண்டு கொழும்பு குழும மருத்துவமனைகள் 08 ஆக காணப்பட்டது.மஹரகம புற்றுநோய் நிறுவனமும்,

ராகம புனர்வாழ்வு நிலையமும் புதிதாக இணைந்து கொண்டன.

1. பொது மருத்துவமனை, 2.பெண்களுக்கான டி சொய்சா வைத்தியசாலை

3. பெண்களுக்கான காசல் தெரு மகப்பேறு மருத்துவமனை

4. லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனை

5. விக்டோரியா மெமோரியல் கண் மருத்துவமனை

6. பல் மருத்துவ நிறுவனம்

7.மஹரகம புற்றுநோய் நிறுவனம்

8.ராகம புனர்வாழ்வு நிலையம் ஆகிய கொழும்பு குழும மருத்துவமனைகள்,

1960 ம் ஆண்டில் 3516 படுக்கைகளை கொண்டிருந்தன.

இது 58 உடன் ஒப்பிடுகையில் 877 படுக்கைகள் அதிகமாகும் .

1950 இல் இருந்து 1960 வரையான 10 ஆண்டுகளில் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் உள்நோயாளிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மக்கள்தொகை அதிகரிப்பு 28 சதவீதமாக இருந்தது .

1959 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1960 ஆம் ஆண்டில் மருத்துவ நிறுவனங்களில் சிகிச்சை பெற்ற தடுக்கக்கூடிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சதவீதம் சிறிது குறைவடைந்திருந்தது . 1959 இல் இது 19.77 சதவீதமாகவும், 1960 இல் 18.77 சதவீதமாகவும் இருந்தது.

ஜனவரி 11, 1960 அன்று, நோயாளிகள் பயன்படுத்தக்கூடிய படுக்கைகளின் சரியான எண்ணிக்கை, மருத்துவ நிறுவனங்களில் உள்நோயாளிகள் எண்ணிக்கை, வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்ற வெளிநோயாளிகளின் எண்ணிக்கை சம்மந்தமான ஆய்வு பல்வேறு மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது.

இந்த ஆண்டில் காணப்பட்ட 411 அரச மருத்துவமனைகளிலும் உள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 31,084ஆக இருந்தது . இது சென்ற ஆண்டை விட 1,202 கூடுதல் படுக்கைகளாகும்.

அந்த வருடத்தில் தனியார் வைத்திய நிலையங்கள் மற்றும் பெருந்த்தோட்ட மருத்துவமனை உட்பட நாட்டில் மருத்துவ சிகிச்சைக்காகக் கிடைக்கும் மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 35,126 ஆகும்.

அரச மருத்துவமனைகளில் இந்த கூடுதல் படுக்கைகள் இரு படுக்கைகளுக்கு இடையிலான இடைவெளியைக் 7 அடியிலிருந்து 5 அடி வரைகுறைப்பதன் மூலம் பெறப்பட்டன.

1959 இல் முன்மொழியப்பட்ட இந்த நடைமுறையால் 1,202 கூடுதல் படுக்கைகள் வழங்கப்பட்ட போதிலும், மக்கள் தொகையுடன் படுக்கை எண்ணிக்கை விகிதம் இயற்கையான மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாக 1,000 மக்கள் தொகைக்கு 3.2 என்ற அளவில் இருந்தது.

பிற தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த விகிதம் 1500:1 என்றிருந்த போதும் இலங்கை 1000:3.2 என்றிருந்தது. இது இலங்கை மருத்துவமனை வசதிகளில் முன்னிலையில் இருந்ததை காட்டுகிறது.

இருப்பினும், மேற்கின் மிகவும் முற்போக்கான நாடுகளில், சராசரி விகிதம் மக்கள் தொகையில் 1,000 பேருக்கு சுமார் 10 படுக்கைகள்.


வெளிநோயாளிகள்

மருந்தகங்களிலும், மருத்துவமனைகளிலும் கிளினிக் களிலும் வெளிநோயாளிகள் பிரிவில் ஏராளமான நோயாளிகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தனர். நோயாளிகளின் வருகையில் ஒரு தெளிவான கூர்மையான அதிகரிப்பு இருந்தது . ஆனால் 1959 இல் மொத்த வெளிநோயாளர்கள் வருகை 25,109,533 ஆக இருந்த வேளையில் 1960ம் ஆண்டு இது 23,217,623 ஆக குறைந்திருந்தது.

1952 இன் 12 ம் இலக்க சுகாதார சேவைகள் சட்டத்தின் 6வது சரத்தின்

1ம் பிரிவு-சுகாதார அமைச்சர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஆணை மூலம், திணைக்களத்தின் திறமையான நிர்வாகத்திற்கு உகந்ததாக கருதும் வகையில், தீவை சுகாதார மாவட்டங்களாகப் பிரிக்கலாம் என்றும்

2ம் பிரிவு-திறமையான நிர்வாகத்தின் நோக்கங்களுக்காகத் தேவைப்படும் துறையின் எந்தவொரு பொருத்தமான பிரிவின் மேற்பார்வையாளர் மற்றும் பிற அலுவலர்கள் ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திற்கும் நியமிக்கப்படலாம் என்றும் குறிப்பிடுகிறது.

இதன் பிரகாரம் நாடு 15 சுகாதார மாவட்டமாக பிரிக்கப்பட்டு 15 சுகாதார சேவைகள் கண்காணிப்பாளர் Superintendent of Hralth Services (SHS) களும் கொழும்பு குழும வைத்தியசாலைகளுக்கு பொறுப்பாக மேலதிகமாக ஒருவரும் என மொத்தம் 16 பேர் நியமிக்கப்பட்டனர். பின்னர் படிப்படியாக இது மாவட்ட பிராந்தியத்திற்கு ஒன்று என்ற ரீதியில் அதிகரிக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் பிராந்திய சுகாதார சேவைகள் பண்ணிப்பாளர்கள் RDHS என அழைக்கப்பட்டனர் .

1961இன் நடுப்பகுதியில் அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டிருந்த போதும் அம்பாறைக்கான RDHS 1984ல் தான் உருவானது. ஆனாலும் 2000 ஆம் வருடம் வழமைக்கு மாறாக பலத்த முயற்சிகளின் பயனாக கல்முனை RDHS பிரிவு உருவாக்கப்பட்டது.
அம்பாறையின் இரண்டாவது RDHS Dr. V. ஜெகநாதன் அம்பாரை பிராந்திய வைத்தியசாலைகளின் உயர்வுக்கு சிறந்த பங்காற்றினார். இவர் ஓய்வு பெறும் போது இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் தற்பொழுது RDHS ஆக கடமை செய்கிற Dr. சகீலா இஸ்ஸதீன் முதல் பெண் RDHS என்பதுடன் நிரந்தர நியமனம் பெற்ற முதல் RDHS என்பதும் விசேட அம்சமாகும்.

SHS பிரிவுகள்,கொண்டிருந்த வைத்தியசாலை களின் எண்ணிக்கையும் மொத்த கட்டில்களும்

-.கொழும்பு குழுமம் 08 3516

1.கொழும்பு  46 7554

2.களுத்துறை  21 1738

3.கண்டி ........  . 41 2505

4.மாத்தளை ....17 762

5.பதுளை ..........34 1079

6.காலி ................22 1630

7.மாத்தறை. .....41 1569

8.யாழ்பாணம் .33 1705

9.வவுனியா .......14 493

10.அனுராதபுரம். 27 1019

(அனுராதபுரம்,தி.மலை)

11.மட்டக்களப்பு...21 1039

12.குருநாகல்..........36 2234

13.புத்தளம்..............13 776

14.இரத்தினபுரி ......1527

15.கேகாலை.......... 18 994

----- -------

411 31084

1960 இல் இலங்கையில் வைத்திய சாலைகளின் எண்ணிக்கை பின்வருமாறு

பொது மருத்துவ மனை............. 01

(General Hospital)

மாகாண மருத்துவமனைகள்....10

(Provincial Hospital )

ஆதார வைத்தியசாலைகள்........12

(Base Hospitals)

மாவட்ட மருத்துவமனைகள்........90

(Ddistrict Hospitals )

குடிசை மருத்துவமனைகள்......13

(Cottage Hospitals )

சுற்றயல் புற அலகுகள்......70

( Peripheral Units)

கிராமப்புற மருத்துவமனைகள்...57

( Rural Hospitals )

மகப்பேறு மருத்துவமனைகள்...124

(Maternity Homes)

மார்பு மருத்துவமனைகள்.... 07

(Chest Hospitals)

மனநல மருத்துவமனை......03

(Mental Units)

தொழுநோய் மருத்துவமனை......03

(Leprosy Hospitals)

தொற்று நோய் மருத்துவமனை..03

( I. D. H)

புற்றுநோய் மருத்துவமனை.......01

குழந்தைகள் மருத்துவமனை.....01

கண் மருத்துவமனை.................01

பல் மருத்துவ நிறுவனம்........01

மற்ற மருத்துவமனைகள்........11

மத்திய மருந்தகங்கள்.......238

(கிளை மருந்தகங்கள் உட்பட )

CD including BD

# பொது சுகாதாரம்

சுகாதார அலகுகள் M. O. H 1/c...46

சுகாதார அலகுகள் O. I. C i/c....49

பள்ளி மருத்துவ அதிகாரிகள்.....O3.

தனிமைப்படுத்தப்பட்ட அலுவலகங்கள்....11

மொத்தம்......411# மட்டக்களப்பு SHS பிரிவு

எமது மட்டக்களப்பு மாவட்டத்தில்

B தரதத்திலான 287கட்டில் கொண்ட மாகாண மருத்துவமனை மட்டக்களப்பிலும் பெரிய மாவட்ட வைத்தியசாலைகள் (A தரம்)

அம்பாரையில் 100 கட்டில்களுடனும்

கல்முனையில் 96 கட்டில்களுடனும் காணப்பட்டன.

சிறிய மாவட்ட வைத்தியசாலைகள் (B தரம்)

இங்கினியாகலையில் 40 கட்டில்களுடனும்

மஹாஓயா வில் 20 கட்டில்களுடனும் காணப்பட்டன. மேலும்

மாந்தீவில் தொழுநோய் வைத்தியசாலை ஒன்றும்

சுற்றயல் கூறு 05,

கிராமப்புற மருத்துவமனைகள் 02,

மகப்பேறு மருத்துவமனைகள் 07

மத்திய மருந்தகங்கள்(கிளை மருந்தகங்கள் உட்பட ) 20ம் ஆகியனவும் காணப்பட்டன.

சுகாதார செலவு

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடுகளின் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நோயாளி பராமரிப்புக்கு செலவு செய்யப்பட , பொது சுகாதாரம் அல்லது சமூக சுகாதார சேவைகளுக்கு 20 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது .

நோயாளிப் பராமரிப்பில் இருந்து தடுப்பு மற்றும் சமூக நலப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் மாற்றம் தேவை என்பதை வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் வலியுறுத்தி வருதல் அதிகரித்து வந்தது.

நோயாளி பராமரிப்பு சேவைகள்.

70 களில் தீவின் சில தொலைதூர பகுதிகளுக்கு போதுமான அளவில் சுகாதார சேவைகள் வழங்கப்படவில்லை, ஆனால் இந்த குறைபாடு படிப்படியாக குறைவடைந்து தற்பொழுது நிலைமை மிகவும் திருப்திகாரமாக இருப்பதுடன் வைத்தியாசாலைகளின் தரங்களில் பாரிய முன்னேற்றங்கள் காணப்படுகிறது.

80 களில் தீவின் கிராமப்புறங்களில் பெரும்பாலும் அமைந்திருந்த மத்திய மருந்தகங்கள் முதல் கொண்டு சிறிய கிராமிய வைத்தியசாலைகள்(RH) அல்லது சுற்றயல் கூறு வைத்தியசாலைகளான (PU ) போன்ற சிறிய நிறுவனங்களின் மூலம் முழு சமூகத்திற்கும் ஆரம்ப அல்லது அடிப்படை மருத்துவ பராமரிப்பு கிடைத்தது. இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் பதிவுசெய்யப்பட்ட/ உதவி மருத்துவர்களால் நிர்வகிக்கப்பட்டன.

இந்த நிறுவனங்களிலிருந்து பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதற்கான வசதிகள் ஆம்புலன்ஸ் சேவைகள் மூலம் கிடைத்தன.

அடுத்த கட்டத்தில் இன்னும் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையான பொது மருத்துவ சேவையை மாவட்ட வைத்தியசாலைகளும் ஆதார மற்றும் பொது வைத்தியசாலைகள் அறுவை சிகிச்சை, மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் போன்ற சிறப்பு சேவைகளையும் வழங்கின.

தலைநகரங்களில் முக்கிய மருத்துவமனைகளுடன் அமைந்திருந்த பெரிய பொது மருத்துவமனைகள்

சிறப்பு ENT, கண், எலும்பியல், போன்ற சிறப்புத் துறையில் சேவைகளை வழங்குகின்றன.

பரந்த அளவிலான விரிவான மற்றும் புதுப்பித்த மருத்துவ பராமரிப்பு வசதிகள். சில விசேட வைத்தியசாலைகளில் வழங்கப்பட்டன.

குழந்தைகளுக்கான லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை, கண் மருத்துவமனை,

மனநல மருத்துவமனைகள், புற்றுநோய் மருத்துவமனை, பெண்களுக்கான இரண்டு மகப்பேறு மருத்துவமனைகள் மற்றும் காய்ச்சல்

மருத்துவமனை போன்றவை மற்ற மருத்துவ நிறுவனங்களில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அந்தந்த சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளித்தது .
தொடரும்.......
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :