அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) புதன்கிழமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் ஏற்பாட்டில், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.டீ.எம். ராபீ, சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், பிரதேச செயலக உத்தியோத்தர்கள், முப்படையினர், திணைக்களங்களின் உயரதிகாரிகள், பொது அமைப்புக்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியோக செயலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.








0 comments :
Post a Comment