பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் நிறுவன ரீதியான பாராட்டு விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், தர முகாமைத்துவப் பிரிவின் ஒருங்கிணைப்பில் நடாத்தப்பட்டு வரும், பிராந்தியத்திலுள்ள சுகாதார நிறுவனங்களின் தர மேம்பாட்டுக்குப் பங்களிப்புச் செய்த சிறந்த ஊழியர்களைப் பாராட்டும் விழாக்களின் தொடராக, கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவின் நிறுவன ரீதியான பாராட்டு விழா அண்மையில் (20) இடம்பெற்றது.

பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். எம்.என்.எம். தில்ஷான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் டாக்டர்.ஸக்கீலா இஸ்ஸடீன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.

சிறப்பு அதிதிகளாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தர முகாமைத்துவ வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.எம். ஹில்மி மற்றும் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர். எம்.ஸி.எம்.மாஹிர் அவர்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரிவின் சிறந்த உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :