திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட உப்பாறு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு தற்போது ஆதரவற்ற நிலையில் பற்றைக்காடுகள் வளர்ந்து கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பல்கலைக் கழக கட்டங்களின் கண்ணாடிகள்,கதவுகள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பல்கலைக் கழக பெயர் பலகைகள் கூட சேதமாக்கப்பட்டு சுற்றியுள்ள வேலிகளும் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதோடு கூரைத்தகடுகளும் களவாடப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு பல மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடடம் மது பிரியர்களின் கூடாரமாகவும் மாறிவருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
பாதியில் நிறுத்த பட்டுள்ள கிண்ணியா பல்கலைக் கல்லூரியையை விரைவில் பூர்த்தி செய்து தருமாறு அப்பகுதி மக்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர் .
கிண்ணியாவில் இப்பல்கலைக் கழக கல்லூரி அமையப்பெறுவதற்கு காரணமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் .எஸ். தெளபிக் அவர்களிடம் இது குறித்து வினவிய போது:-
குறித்த கிண்ணியா உப்பாறு பல்கலைக்கலகம் 2018 ம் ஆண்டு 12000 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் அடிக்கல் நாட்டப்பட்டு முதல் கட்டமாக ஐம்பது மில்லியன் ரூபாய் செலவில் 12 ஏக்கர் சுற்று வேலி போடுவதற்கான வேலை திட்டம் அதே போன்று அங்கே உத்தியோகத்தர்களுக்கான விடுதியும் கட்டி முடிக்கப்பட்டுயிருந்தது தொடர்ந்தும் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்த நிலையிலேயே கைவிடப்பட்டுள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின் முடக்கப்பட்டு தற்போது அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால்
இன்று அனைத்து வேலைகளும் ஆரம்பிக்க முடியாத நிலையில் உள்ளதால் இடை நிறுத்த பட்டுள்ளதாகவும்,தெரிவித்தார்.
மேலும் நான் வெளிநாட்டு தூதுவர்களிடம் இவ்விடயம் குறித்து கதைத்து வருகின்றேன்.இதற்கான நிதியை பெற்று பல்கலைக் கழக கல்லூரியை இம்மாவட்டத்தில் ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகளில்,
நாட்டில் பொருளாதார சீர்கேடுகள் இல்லாமலிருந்தால் இக்கட்டிடம் அமைந்திருக்கும் இவ்வருடம் கட்டிடம் முடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என்றார்.

0 comments :
Post a Comment