இலங்கையில் FABC (First Academy of Block chain Council)


அஷ்ரப் ஏ சமத்-
லங்கையில் முதற்தடவையாக துபயில் உள்ள FABC (First Academy of Block chain Council) இந்திய கனனி நிறுவனம் வெப் 3 கம்பனி துபாய் நகரில் தலைநகரமாக்க கொண்டு இயங்கி வருகின்றது. இக் கம்பனி முதற்தடவையாக இலங்கையிலும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

இலங்கையில் உள்ள கம்பனி இலங்கையில் EXIGA Private Limited எக்ஜிக்கா தனியாா் லிமிட்டெட்டின் இலங்கைக்கான வதிவிட பிரநிதி கலாநிதி ஏ.யு.எல்.ஏ ஹில்மிக்கும் துபாய்யில் உள்ள எப்ஏபிசி கம்பனியின் சக்தி விஸ்கன் ராஜகருவுக்குமிடையில் 19.02.2023 கொழும்பு ஹில்டன் ஹோட்டல் போல் ருமில் வைத்து ஒப்பந்தம் கைச்சாதிதடப்பட்டது.

இவ் வைபவத்தில் துபாய் நாட்டில் இத்துறையில் முதலிட்டுள்ள இந்திய முதலீட்டாளர்களும் விஜயம் மேற்கொண்டிருந்தனா். இக் கம்பனி உலகலாவிய ரீதியில் துபாய், இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கனனித்துறையில் வெப் 3 துறையில் முதலிட்டு இந் நாடுகளில் இத்துறை மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
 
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இக் காலகட்டத்தில் எங்களது கம்பனிகள் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் கைகொடுக்குமுகமாக இலங்கையில் மிகக் கூடுதலான கனனித்துறையில் மனித வலு நிறையவே காணப்படுகின்றது. இலங்கையின் கல்வித்துறை ஆங்கில அறிவு மிகக் கூடுதலாக உள்ளது.
 
இத்துறையில் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் கற்கின்ற கற்று வெளியான இளம் பட்டதாரிகள் 10 ஆயிரம் பேரை அறிமுகப் பயிற்ச்சிகளை அறிமுகப்படுத்தி அதில் 1000 பேரை தெரிபு செய்து அதில் 30 பேருக்கு கூடிய சம்பளத்தில் துபாய்கம்பணிகளிலும் தொழில் வாய்ப்பு வழங்க உள்ளோம் அவா்கள் மனித்தியாலயம் அல்லது 3 மணித்தியலாயங்களில் டொலர்களில் அல்லது றியால்களில் நிறைய ஊதியம் பெற சர்ந்தர்ப்பம் வழங்குவோம்.
இலங்கையில் உள்ள எக்ஜிக்கா கம்பனி ஊடாக இலங்கை உள்ள அமைச்சுக்கள் , பல்கலைக்கழகங்களுடன் உள்ள அதிகாரிகள் மட்டத்தில் பல்வேறு பேச்சவார்த்தை நடாத்தியுள்ளோம்.
 
இலங்கை மாணவா்களுக்கு சிறந்த வெப் 3 பிளக் செயின் கனனி அறிவை வழங்குவது. அத்துறையில் இலங்கையிலும் கனனிமயப்படுத்துதல், டிசைனா், சந்தைப்படுத்துதல், களஞ்சியம் , வங்கி, கணக்கியல் , கட்டிட நிர்மாணம், போன்ற பலதுறைகளில் இலங்கையில் வெப்3 அறிமுகப்படுத்த உள்ளது.

உலகில் நவீன கனனித்துறையில் வளா்ச்சிக்கு இந்திய கணனி விற்பண்ணர்கள் வடிவமைப்பாளா்கள் துபாய் நாட்டில் முதலிட்டு அந் நாட்டில் 50க்கும் மேற்பட்ட கம்பனிகள் இயங்குகின்றன. அத்துடன் உலகலாவிய நாடுகளிலும் பரவலாகி அந்தந்த நாடுகளிலும் இத்துறையில் பாரிய வளா்ச்சியில் பொருளாதாரத்தில் முதலிடுதல், நிர்வாகம் . வங்கி, வணிகம், உயா்கல்வி, கட்டிட வடிவமைப்புக்கள், நகர வடிவமைப்புக்கள் போன்ற 150 துறைகளில் கனனிமயப்படுத்துதல் போன்ற துறைகளில் தற்கால 21ஆம் நுாற்றாண்டுக்கு ஏற்ற மாதிரி முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்திய கணனி விற்பண்ணராந திரு. சக்தி ராஜகருனன் மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் ஊடகவியலாளா்கள் மாநாட்டில் கருத்துத் தெரிவித்தார்

கடந்த இரு வாரங்கள் இலங்கையில் தங்கி நின்று சம்பரகமுவ, களனி, கிழக்கு ஊவா, மற்றும் வடக்கில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் அமைச்சின் செயலளா்கள் ,கல்வியமைச்சா், சுற்றுலாத்துறை அமைச்சா், தொழில் அமைச்சா், உயா்கல்வியமைச்சா், முதலீட்டு அமைச்சு போன்ற அரச நிறுவனங்களுக்குச் சென்று எமது திட்டங்கள், முதலீடு. தொழில்வாய்ப்பு போன்ற அறிக்கைகள் பற்றி பேச்சு நடாத்தினோம். அனைவரும் எமது திட்டத்தினை வரவேற்றும் இக் காலகட்டத்தில் இளைஞா்கள் யுவதிகளுக்கு சா்ந்தர்ப்பம் வழங்குவதற்கும் இணக்கம் தெரிவித்து்ளளனா்.

இலங்கையில் நிறையவே மனித வளம் உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் மனித வளம் குறைந்து காணப்படுகின்றது. இத்துறையில் இலங்கையில் இளம் பட்டதாரிகளை ஒன்லைன் ஊடாக அவா்களது திறமைகளை அறிந்து அவா்களை இனம் கண்டு ஒன்லைன் ஊடாக தயாா்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.
இலங்கையில சம்பளம் வருடாந்தம், மாதாந்தம், முறையே இருந்து வருகின்றது. ஆனால் நாங்கள் ஒர் இளைஞனை 3, அல்லது 1 மணித்தியாலத்திற்குள் அவனது திறமைகளை அறிந்து அவனுக்கு கொடுக்கப்பட்ட திட்டத்தினை அவன் வெற்றிகரமாக முடிப்பதற்கு மணித்தியாலத்தில் ஊதியத்தினை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இத்திட்டத்திற்கு இந்தியர்கள் துபாய் நாட்டில் முதலிட்டாளா்கள் 5 க்கும் மேற்பட்டோா் இந்ந வைபவத்திற்கு கொழும்புக்கு வருகை தந்திருந்தனா். அவா்கள் இணக்கம் தெரிவித்துள்ளனா். அத்துடன் இலங்கையில் எக்ஜிக்கா தனியாா் கம்பனியின் ஏற்பாட்டாளர் டொக்டா் ஹில்மியின் எகசிக்கா கம்பனி ஊடாக சகல உள்ளுர் நிர்வாக கட்டமைப்புக்களை தயாா் படுத்தி வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :