நாட்டில் காணப்படும் அனைத்து விதமான பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டுமானால் அதற்கு ஒரே தீர்வு சஜித் பிரேமதாசா மாத்திரமே.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் தமிழ்ப்பிரிவு இணைப்பாளருமான வெள்ளையன் வினோகாந்த் நேற்றுமுன்தினம்(18) சனிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர்களின் அறிமுக ஊடகச்சந்திப்பு
காரைதீவிலுள்ள அம்பாறை ஊடக மையத்தில் இடம்பெற்றது .
திருக்கோவில் பிரதேச சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களான எஸ். வரதராஜன், முன்னாள் உபதவிசாளர் எம்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, உபதவிசாளர் எஸ் விக்னேஸ்வரன், ஜி. சுதாரசன், பி.ஹேதீஸ்வரன், கே. கமல்ராஜன், எஸ்.யுஹிதன், கே. ரவிமதி, பி .நந்தகுமார், பி. சீலன் ஆகியோரோடு, ஓய்வு நிலை விளையாட்டு அதிகாரி ரி.நல்ல தம்பியும் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்கள்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்.
இலங்கையில் கடந்த ஆறுதசாப்த காலமாக மக்கள் வாக்களித்து வந்திருக்கின்றார்கள். ஆனால் இம்முறை முதல் தடவையாக ஐக்கிய மக்கள் சக்தி நாட்டில் சகல பாகங்களிலும் தேர்தலில் இறங்கி உள்ளது. 70 -80- 90 களில் ஜனசவிய கம்முதாவ போன்ற பல திட்டங்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்தி மக்களை விமோசனப்படுத்திய அமரர் பிரேமதாச அவர்களின் இரத்தம் புதல்வன் சஜித் பிரேமதாசா ஒரே ஒரு முதுகெலும்புள்ள தலைவராக இருக்கிறார்.
எனக்கு ஆலையடிவேம்பு, காரைதீவு, திருக்கோவில் ஆகிய பிரதேச சபைகள் பொறுப்பளிக்கப்பட்டு இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி நிச்சயமாக இந்த சபைகளிலே வெற்றி பெறும் என்பதில் மாற்று கருத்துக்கள் இல்லை .
நாங்கள் கிராம ரீதியாக ஒவ்வொரு பிரதேசத்திலும் பல பிரச்சினைகளை இனங்கண்டு இருக்கின்றோம். அவற்றை தீர்ப்பதற்கான திட்டத்தையும் வகுத்திருக்கின்றோம். மார்ச் மாதம் ஒன்பதாம் தேதிக்கு பிற்பாடு இவை அனைத்தும் அமுலுக்கு வரும். இன்று பசித்தவர் தொடர்ந்து காய்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இன்றையதேர்தல் காலத்தில் இலவசங்கள் தொடர்பாக பலரும் வாக்குறுதி அளிப்பார்கள் .
அதற்கு அடிபணியாமல் சோரம் போகாமல் உண்மையான தலைவர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் .
2019 இல் நாம் பெரும் தவறை செய்திருந்தோம். முன்பள்ளிக்குக் கூட செல்லாத ஒருவரை 69 லட்சம் வாக்களித்து ஜனாதிபதி ஆக்கினோம் .அதன் பிரதிபலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். அந்த கள்ளக் கூட்டத்தை நாட்டில் இருந்து விரட்டி அடிக்க வேண்டும் என்றால் அதற்கு உரிய தீர்வு சஜித் என்பதுதான். அபிவிருத்தி என்பது கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்ல வேண்டும்.
எனவே மக்களே ஏமாந்து விடாமல் எமது ஐக்கிய மக்கள் சக்தி வாக்களித்து உங்களையும் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.என்றார்.

0 comments :
Post a Comment