தேச விடுதலை மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளில் ஆட்சிபீடம் ஏறமுடியாது – வேட்பாளர் அமீன் ஹம்ஸாக்



அபு அலா -
தேச விடுதலை மக்கள் கட்சியின் ஆதரவின்றி எந்தக்கட்சியும் அட்டாளைச்சேனை பிரதேச சபையில் ஆட்சிபீடம் ஏறமுடியாது என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புறத்தோட்ட வட்டார வேட்பாளர் அமீன் ஹம்ஸாக் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டார பிரதேச மக்களுடனான சந்திப்பு இன்று (31) புறத்தோட்டத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் தேச விடுதலை மக்கள் கட்சி களமிறங்கியதைக் கண்டு பல கட்சிகள் ஆட்டங்கண்டுள்ளது. அதில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் எல்லோரும் படித்த இளம் வேட்பாளர்களாகவும், மக்கள் மத்தியில் நன்மதிப்பையும், ஆதரவுகளையும் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதனாலேயே அவர்கள் அஞ்சியவர்களாக காணப்படுகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அதிக செல்வாக்குச் செலுத்திவருகின்ற முஸ்லிம் கட்சிகள் எங்கள் வருகையையும், தேச விடுதலை மக்கள் கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களையும் கண்டு, இத்தேர்தலில் போட்டியிட வேண்டாமென பல அழுத்தங்களை நேரடியாகவும், எங்களின் குடும்பத்தாரின் உதவிகளையும் நாடிச் செல்கின்றனர். அதுமாத்திரமன்றி தங்களின் கட்சிகளில் இணைந்துகொள்ளுமாறும், தங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தங்களின் கட்சியூடாக செய்து தருவதாகவும் அழைப்பு விடுக்கின்றனர்.
அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டாரம், அறபா வட்டாரம், அல்முனீறா வட்டாரம் போன்ற வட்டாரங்களை வெற்றிகொள்வது உறுதியாகிவிட்டது. அத்துடன் பாலமுனை மற்றும் ஒலுவில் பிரதேச வட்டாரங்களில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளவர்களும் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. குறிப்பாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சபைகளை எந்தக்கட்சி ஆட்சியமைப்பதாக இருந்தாலும் தேச விடுதலை மக்கள் கட்சியின் ஆதரவின்ற ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதளவு நாங்கள் இருக்கின்றோம். எங்களின் வெற்றி இறைவனின் உதவியால் உறுதியாகிவிட்டது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :