வந்தாறுமூலையில் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு நீதி கோரி வீதி மறியல்



கிழக்கு மாகாணம் வந்தாறுமூலையில் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இரு பிள்ளைகளின் தந்தைக்கு நீதி கோரி, இன்று (05.02.2026) காலை 10.30 மணியளவில் அம்பலத்தடி சந்தியில் மக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரடியனாறு பொலீஸ் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம் சமுளையடிப் பொத்தானை வயல் பகுதியில் கடந்த மாதம் 16ஆம் திகதி இரவு, இனம் தெரியாத குழுவினரால் பத்மநாதன் பகிரதன் என்பவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டார். பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தார்.

இன்று அவரது இறுதிக் கிரியையை நிறைவேற்றுவதற்காக உடல் எடுத்துச் செல்லப்பட்ட வேளையில், வந்தாறுமூலை அம்பலத்தடி சந்தியில் பிரதான வீதியை மறித்து உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நீதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் இடம்பெற்று 20 நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படாததைக் கண்டித்து, விசாரணைகளில் பக்கச்சார்பான அணுகுமுறை உள்ளதாகவும் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு செல்லப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

போராட்டம் காரணமாக சில மணி நேரங்கள் பிரதான வீதி ஊடாக சென்ற வாகனப் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

— ஜே. எப். காமிலாபேகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :