இம்முறை வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் இறக்காமம் றோயல் கனிஷ்ட கல்லூரியில் 106 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றி அதில் 23 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றுள்ளார்கள் என்று கல்லூரி அதிபர் எம்.ஏ.பஜீர் தெரிவித்தார்.
இறக்காமம் கோட்ட மட்டத்தில் அதிகூடிய புள்ளியாக 158 புள்ளிகளை இதே பாடசாலையைச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா மற்றும் எம்.ஆர்.ஷஹீட் ஆகியோர் பெற்று சாதனை படைத்துள்ளனர்
இதேவேளை ,ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் முனாப் பாத்திமா நுஸைபா(158), அஸ்மில் சிமாறா கைஸ் (148), லரீப் பைஹா நூர் (144 ) ஆகிய பிள்ளைகள் சித்தி அடைந்துள்ளனர்.

0 comments :
Post a Comment