ஐக்கிய மக்கள் சக்தி எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அனைத்து சபைகளையும் கைப்பற்றி வரலாறு படைக்க இருக்கிறது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்வதை முன்னிட்டு மேற்படி கருத்தைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
இம்முறை அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆனது ஒரு பெரிய மாறுதலை உண்டாக்கவிருக்கிறது. கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள் இனவாத போக்கில் தங்கள் நகர்வுகளை முன்னெடுத்து மக்கள் மத்தியில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய தவறியுள்ளனர்.
கடந்த ஆறு தசாப்தங்களுக்கு மேலாக எதுவிதமான அரசியல் வேறுபாடுகளையோ அபிவிருத்திகளையோ அல்லது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையோ அவர்கள் கொண்டு வரவில்லை.
மேலும் இம்முறை தமிழ் கட்சிகள் தங்களுக்கு இடையே காணப்படக்கூடிய ஒற்றுமையின்மை காரணமாகவும் அவர்கள் பல்வேறுபட்ட கட்சிகளாக பிரிந்து உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.
எனவே தீர்வற்ற எமது நாட்டுக்குத் தீர்வை கொண்டு வரக்கூடிய மிகவும் சரியான தலைவர் என்ற வகையில் இலங்கையில் வாழக்கூடிய அனைத்து மக்களுடைய மனதிலும் இன மத ஜாதி மொழி பேதங்களை கடந்து ஏழைகளை நேசிக்கும் தலைவனாக தடம் பதித்து வரும் தற்பொழுது நாட்டிலே காணப்படக்கூடிய முதுகெலும்புடன் செயல்படக்கூடிய ஒரேஒரு தலைவர் சஜித் பிரேமதாச அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதனால் இம்முறை உள்ளைராட்சி மன்ற தேர்தலிலே நாடளாவிய ரீதியிலே ஐக்கிய மக்கள் சக்தியானது தன்னுடைய ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் என்பதில் எந்த விதமான ஐயப்பாடுகளோ மாற்று கருத்துகளோ ஒருவர் மனதிலும் இல்லை.
அதே சந்தர்ப்பத்தில் அம்பாறை மாவட்டம் முழுவதுமாக அனைத்து பிரதேச பிரதேச சபைகளையும் கைப்பற்றும் என்ற உறுதிமிக்க நம்பிக்கையானது அனைவரது மனதிலும் தற்பொழுது வேர்கொண்டுள்ளது.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேச சபைகளான திருக்கோவில், ஆலையடி வேம்பு அதேபோல தமிழர்கள் அதிகமாக வாழும் பிரதேசங்களான காரைதீவு, நாவிதன்வெளி போன்ற பிரதேச சபைகளிலே பெரும்பான்மையான ஆசனங்களை நிச்சயமாக சஜித் அணி சார்பாக கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை எம் மத்தியில் உள்ளது.
இதனை ஆணித்தரமாக நாங்கள் பதிவு செய்கிறோம் .
இன்று சஜித் விஜயம்!
இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் எங்களுடைய
தலைவர் சஜித் பிரேமதாஸ் அவர்கள் முதற்கட்ட பிரச்சாரத்தினை கிழக்கில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் விசேடமாக தமிழ் மக்கள் சேர்ந்து வாழப்படக்கூடிய திருக்கோவில் மற்றும் கோமாரி போன்ற பிரதேசங்களில் பிரச்சார நடவடிக்கைகளுக்காக இன்று 31 ஆம் தேதி காலை 9, 10 மணியளவில் கோமாரி திருக்கோவில் போன்ற பகுதிகளுக்கு மக்களை சந்திக்கிறார்.
அதேபோல தேர்தல் பொது பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு எதிர்காலத்தில் நாங்கள் மக்களுக்காக செய்யவிருக்கும் அர்ப்பணிப்புகள் தொடர்பாக தன்னுடைய ஆழமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பதிவு செய்ய உள்ளார். எனவே தமிழ் மக்களாகிய நாம் ஏமாற்றப்பட்டது போதும் ஊழல் அரசாங்கத்திற்கும்ஊழல் அரசியல்வாதிகளுக்கும் கட்சி விட்டு கட்சி மாறும் அரசியல் வியாபாரிகளுக்கும் எங்களுடைய வாக்குகளையும் எங்களுடைய உரிமைகளையும் நாங்கள் வழங்கியது போதும் .இம்முறை நாட்டை நேசிக்கும் ஒரு தலைவனுக்கும் நாட்டை கட்டி எழுப்பக்கூடிய ஒரு சக்தி அதுதான் ஐக்கிய மக்கள் சக்தி எமது கட்சிக்கும் உங்கள் வாக்குகளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கியது போல அனைவரும் ஒன்று திரண்டு டெலிபோன் சின்னத்துக்கும் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் வழங்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
0 comments :
Post a Comment