இலங்கையின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்ட கடற்கரை, மையவாடிகள், வடிகான்கள் , தோனா, பூங்கா போன்ற இடங்களில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஏ.ஹமீட், நிருவாக உத்தியோகத்தர் ஏ.சி.எம்.பளீல், நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எஸ்.நளீர், சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீம், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அலுவலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், மகளிர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், இளைஞர் கழக சம்மேளன அமைப்புக்களின் உறுப்பினர்கள், இளைஞர் கழக அமைப்புக்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர்.
0 comments :
Post a Comment