மரம் சார்ந்த முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் மயிலுடன் இணைந்தார்



மாளிகைக்காடு நிருபர்-
நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர செயற்பாட்டாளருமான ஏ.ஏ.எம். முஹம்மட் றியாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியுடன் திங்கட்கிழமை இணைந்து கொண்டார்.

நிந்தவூர் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக கடந்த காலங்களில் தீவிரமாக செயற்பட்டு வந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ஏ.ஏ.எம்.றியாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிர் ஆகியோரின் சமூகம்சார் செயற்பாடுகளை உணர்ந்து கொண்டு தனது ஆதரவாளர்களுடன் (30) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெற்றிக்காக பாடுபட இருப்பதாகவும் அதன் முதற்கட்டமாக நிந்தவூர் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற பரம்பரை அரசியல் மற்றும் டீல் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்பதாற்கான முஸ்தீபுகளை முன்னெடுப்பதாகவும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஏ.எம். முஹம்மட்றியாத் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :