மருதமுனை எம்.ஐ.எம்.முஜீப் சமுர்த்தி வங்கி முகாமையாளராக பதவி உயர்வு.



கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர்-
ருதமுனை சமூர்த்தி வங்கியின் சிரேஷ;ட உதவி முகாமையாளராக அர்ப்பணிப்புடனும்,வினைத்திறனுடனும் கடமையாற்றிய எம்.ஐ.எம்.முஜீப் வங்கி முகாமையாளராக பதவி உயர்வு பெற்று சம்மாந்துறை ஹிஜ்றா வங்கியின் முகாமையாளராக் கடமையேற்றுள்ளார்.

இவர் மருதமுனை சமுர்த்தி வங்கியில் சேவையாற்றியதை கௌரவித்து மருதமுனை வங்கி,வலய உத்தியோகத்தர்களும்,கட்டுப்பாட்டுச் சபையினரும் இணைந்து ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு சிரேஷ;ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எ.பி.எம்.நவாஸ் அவர்களின் வழிகாட்டலில் மருதமுனை சமுர்த்தி வங்கியில் அண்மையில் (11-01-2023)நடைபெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி அலி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்திப் பிரிவில் கடமையாற்றும் சிரேஷ;ட தலைமை முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் மற்றும் வலய முகாமையாளர்கள், வங்கி முகாமையாளர்கள் உள்ளீட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு மருதமுனை சமூர்த்தி வங்கியின் சிரேஷ;ட உதவி முகாமையாளராக அர்ப்பணிப்புடனும்,வினைத்திறனுடனும் எம்.ஐ.எம்.முஜீப் ஆற்றிய சேவையை கௌரவித்து பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி வாழ்த்துப் பத்திரம் வழங்கி கௌரவித்ததுடன் இவரது சேவையைப் பாராட்டிப் பேசினார்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :