தம்பலகாமம் பிரதேச செயலகக பிரிவில் உள்ள வறுமைக் கோட்டியின் கீழ் வாழும் 100 குடும்பங்களுக்கு முஸ்லிம் எயிட் நிறுவனத்தால் இலவச குடிநீர் இனைப்பு இன்று (17)வழங்கப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 16 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இனைப்பு தம்பலகாமம் பிரதேச செயளாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களினால் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. இதில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட முஸ்லிம் எயிட் நிருவன ஊழியரும் கலந்து கொண்டார்.
இது போன்று கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட 100 குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment