நாளை முதல் அம்பாறை மாவட்டத்தில் 20 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் .



வி.ரி.சகாதேவராஜா-
ம்பாறை மாவட்டத்தில் உள்ள 20உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனு பத்திரம் தாக்கல் நாளை 18ஆம் திகதி வியாழக்கிழமை முதல் 21ஆம் திகதி சனிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும்
என் அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கசுன் ஸ்ரீநாத் அத்தநாயக்க அறிவித்துள்ளார்.

குறித்த வேட்புமனுக்கள் 21ஆம் திகதி, நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையும்.
அம்பாறை மாவட்டத்தில் மொத்தமாக 20 உள்ளூராட்சி சபைகளில் உள்ள 225 வட்டாரங்கள் ஊடாக 231 உறுப்பினர்கள் வட்டாரங்களூடாக தெரிவு செய்யப்படுவார்கள். அதற்காக குறைந்தது 438 வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.
தற்போது அமுலில் இருக்கும் பழைய முறைப்படி தற்போது நியமனப்பத்திரம் கோரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள இருபது உள்ளூராட்சி சபைகளுக்கான பூரண விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சபையின் வட்டாரங்களின் எண்ணிக்கை, தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, வேட்பாளர்களின் எண்ணிக்கை ,அதில் ஆண் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை, செலுத்த வேண்டிய கட்டுப்பணம் போன்ற விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கட்சி ஒன்றின் வேட்பாளர் ஒருவர் 1500 ரூபாவையும், சுயேட்சை அணியின் வேட்பாளர் ஒருவர் 5000 ரூபாவை யும் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில் அதிகூடிய வட்டாரங்களும் அதிகூடிய உறுப்பினர்களுமுள்ள உள்ளூராட்சி சபையாக கல்முனை மாநகர சபை திகழ்கிறது. அங்கு 23 வட்டாரங்கள் 24 உறுப்பினர்கள்.
மாவட்டத்தில் அதி குறைந்த வட்டாரங்களும் குறைந்த உறுப்பினர்களுமுள்ள உள்ளூராட்சி சபையாக அக்கரைப்பற்று பிரதேச சபை திகழ்கிறது. அங்கு 5வட்டாரங்கள் 5 உறுப்பினர்கள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :