அமீர் அஜ்வாத் எழுதிய இலங்கை ஓமான் நட்புறவு எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா



ஏ.எஸ்.எம்.ஜாவித்-
ல நாடுகளில் இலங்கைத்தூதுவராக கடமையாற்றி தற்போது வெளிநாட்டு அமைச்சில் பணிப்பாளர் நாயகமாக பணிபுரியும் அமீர் அஜ்வாத் எழுதிய இலங்கை ஓமான் நட்புறவு எனும் ஆங்கில நூல் வெளியீட்டு விழா நேற்று (12) கொழும்பு-07 லக்ஷ்மன் கதிர்காமர் மாநாட்டு மண்டபத்தில் வெளிநாட்டு அமைச்சுஇ இலங்கைக்கான ஓமான் தூதரகம் மற்றும் லக்ஷ்மன் கதிர்காமர் நிலையம் என்பன இணைந்து நடாத்தின.
நிகழ்வில் பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சர் அலி ஷப்ரியும் கௌரவ அதிதிகளாக வெளிநாட்டு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியஇ அமைச்சின் செயலாளர் அருனி விஜயவர்த்தனஇ இலங்கைக்கான ஓமான் தூதரகத்தின் தூதுவர் அஹமட் அலி ஸயீட் அல் ரஸ்டிஇ உட்பட பல தூதரகங்களின் தூதுவர்கள்இ வெளிநாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வரவேற்புரையை வெளிநாட்டு அமைச்சின் பதில் நிறைவேற்றுப் பணிப்பாளர் இ.ஏ.எஸ்.டபிள்யு. எதிரிசிங்க வழங்கினார்இ ஆரம்ப உரைய அராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும்இ புத்தக ஆய்வினை கலாநிதி ரங்க கலன்சூரியவும்இ நன்றி உரையை எழுத்தாளர் அமீர் அஜ்வாதும் வழங்கினார்கள்.
எழுத்தாளர் அமீர் அஜ்வாத் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளுக்கு புத்தகத்தை வழங்கி வைத்ததுடன் ஏனையவர்களும் புத்தகத்தை பெற்றுக் கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :