அக்கரைப்பற்று இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இசங்கணிச்சீமையிலிருந்து போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு அக்கரைப்பற்று பிரதேச சபைக்கு உறுப்பினராக சென்ற ரீ.எம் ஐய்யுபின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் "ஊர் கூடி உன்னை வாழ்த்துகின்றோம்"- என்றும் நீயே எமது மக்களுக்கான பிரதிநிதி..! எனும் தொனிப்பொருளிலாலான பாராட்டு விழா அக்கரைப்பற்று இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஐ கே சுலைமாலெப்பை தலைமையில் பள்ளிவாசல் கூட்ட மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யுப் கடந்த ஐந்து வருடம் இந்த பிராந்திய மக்களுக்காக தன்னை அயராது அர்ப்பணித்து பல சேவைகளை செய்திருந்தார். அவரை பாராட்டி கௌரவிக்குமுகமாக இசங்கணிச்சீமை ஜும்மா பள்ளிவாசலினால் ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர் சங்கம், சன சமூக நிலையம் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் தனது முயற்சியின் பலனாக நியமனம் பெற்றுக்கொடுக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து பொன்னாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டி கௌரவித்தனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ றாசிக், உப தவிசாளர் ஏ.எம் அஸ்ஹர், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜி.பர்சாத், எம்.எம் முசம்மில், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், ஆசிரியர்கள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை உறுப்பினர் ரீ எம் ஐய்யுப், இன்று எனக்கு கிடைக்கின்ற கௌரவமும், பொன்னாடையும் என்னை பெற்றெடுத்த தந்தைக்கு உரித்தானது என கூறி இவ்விழாவுக்கு வருகை தந்திருந்த அதிதிகள் இணைந்து உறுப்பினரின் தந்தையான எம். எல். தாஹிர்க்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
மேலும் இசங்கணிச்சீமை கமுஅக்/அல் கமர் வித்தியாலய அதிபர் ஜனாப் தாலிப் பாடசாலை அபிவிருத்திக்காக தன்னை என்றும் அர்ப்பணிக்கும் ரீ எம் ஐய்யுப்பை பாராட்டி பாடசாலை சார்பாக பொன்னாடை போற்றி கௌரவித்தார்.
0 comments :
Post a Comment