குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்; ஓட்டமாவடியில் சம்பவம்!



எச்.எம்.எம்.பர்ஸான்-
மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம் இன்று (1) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டுப் பெண்மணி குளிர்சாதனப்பெட்டியில் இருந்த பொருட்களை எடுக்க திறந்த போது குளிர்சாதனப்பெட்டியில் மின் ஒழுக்கு ஏற்பட்டிருந்த காரணமாக மின்சாரம் தாக்கியதில் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான அபூபக்கர் பஸ்மியா என்பவரின் உடல் பிரேதே பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :