கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கல்முனை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கிறீன்ட் பீல்ட் தொடர் மாடி மக்கள் குடியிருப்பு பகுதியில் இன்று வியாழன் (01)அதிகாலை காட்டு யானைகள் உள் நுழைந்து அங்கு அமையப் பெற்றுள்ள கல்முனை சமூர்த்தி வங்கி சுற்றுபுற வேலியின் ஒரு பகுதியையும் மற்றும் கல்முனை ரோயல் வித்தியாலத்தின் சுற்றுபுற வேலியின் ஒரு பகுதியை யும் சேதப்படுத்தி உள்ளதாக தெரியவருகிறது.
இரவு வேளைகளில் குறித்த பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள வயல் வெளிகளில் கூட்டமாக சஞ்சரித்து காணப்படும் நிலையில் யானைகள் குறித்த குடியிருப்பு பகுதியில் வந்து அதிகாலை 2.30 மணியளவில் சேதம் விளைவித்ததாக குடியிருப் பாளர்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் குறித்த குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தரும் நிலையில் உள்ளதால் இதனால் மிகவும் அச்ச நிலையில் தாம் வசித்து வருவதாக பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கல்முனை மாநகர சபையினால் சேமிக்கப்படும் திண்மக்கழிவுகள் கல்முனை கீறின் பில்ட் குடியிருப்பு பகுதியை அண்மித்த வயல் வெளி பகுதியில் மொத்தமாக கொட்டப்பட்டு சேமிக்கப்பட்டு அகற்றல் நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் குறித்த திண்மக்கழிவினை உண்பதற்காய் காட்டு யானைகள் வருகை தருவதாக குடியிருப்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
யானைகளின் வருகையினை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருகை தருவதை உடனடியாக கட்டுப் கட்டுப்படுத்துமாறு பொது மக்கள் உரிய அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளிடம். கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment