சென்ற 28/08 அன்று , பெரிய புல்லுமலையிலிருந்து கோப்பாவெளி முதலாம் கட்டையிலுள்ள கோயிலுக்கு வழிபாட்டுக்காக மோட்டார் சைக்கிளில் சென்ற நவரெட்ணம் புஸ்பவதி (42) என்ற இளம் தாய், வெலுக்காக்கண்டி குளத்தோரமாக பயணிக்கும்போது பாதை வளைவிலுள்ள காட்டுக்குள் நின்ற யானையின் தாக்குதலுக்குள்ளானதால் , தூக்கி வீசப்பட்ட இவர் சுவாசிப்பதற்கு சிரமப்பட்ட நிலையில் கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் போது , சிகிச்சை பலனின்றி இன்று (01/09) அதிகாலை மரணமானார்.
கரடியனாறு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தகவலினடிப்படையில் ,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளித்தார்.
மேலும் , யானையின் தாக்குலால் விலா என்புகள் உடைந்து உள்ளக இரத்தக்கசிவு ஏற்பட்டு இதயம் செயலிழந்ததால் மரணம் சம்பவித்திருப்பதாக பிரேத பரிசோதனையின்போது தெரியவந்ததாக, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் தெரிவித்தார்..
0 comments :
Post a Comment