இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோருக்கும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் ஆரிபுல் இஸ்லாம் அவர்களுடனான சந்திப்பொன்று பங்களாதேஷ்
உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில், எமது நாட்டில் கல்வி, விளையாட்டு, வெளிவிவகாரம் மற்றும் சுற்றுலா துறை போன்றவற்றில் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள குறைகள் குறித்தும் மேலும் இத்துறைகளில் பங்களாதேஷ் நாட்டின் இளைஞர்களின் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடப்பட்டது. கலந்துரையாடலின் பின்னர், இலங்கையின் வெளியுறவுத்துறை மற்றும் சுற்றுலா துறை மேலும் வளர்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக இலங்கை, பங்களாதேஷ் இளைஞர்களின் உறவுகளை வலுப்படுத்தும் செயற்திட்டங்களுக்கான ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
0 comments :
Post a Comment