குறித்த அமர்வானது நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த அமர்வில் பங்கேற்கும் வகையில் இலங்கை நாடாளுமன்ற குழுவானது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அங்கு சென்றுள்ளது.
குறித்த குழுவில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன, ராஜிகா விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இரா.சாணக்கியன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது இளைஞர்கள் தொடர்பான பல விடயங்களுடன் காலநிலை மாற்றம் மற்றும் உலகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன என்பதுக் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment