வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவத் தலைவிகளுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கி, சின்னம் சூட்டும் நிகழ்வு புதன்கிழமை (26) இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜே.தாஜுன் நிஸா, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியர் திருமதி எம்.ஐ.ஆர் பஸீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது, இம்முறை க.பொ.த உயர் தரம் எழுதவுள்ள மாணவிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment