வவுனியாவில் சுவாமி விவேகாநந்தரின் இலங்கைவருகை நினைவுநிகழ்வு



வி.ரி.சகாதேவராஜா-
ராமகிருஸ்மிசன் ஸ்தாபகர் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரம் வவுனியாவில் நடைபெற்றது.

உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் இலங்கைக்கான தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜீ மஹராஜ் தலைமையில் நேற்றுமுன்தினம் நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி தக்ஷஜானந்தஜீ மஹராஜ், இமட்டு.இ.கி.மிசன் துணைமேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜீ மஹராஜ் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

அங்குள்ள சுவாமி விவேகானந்தரின் திருவுருச்சிலைக்கு சுவாமிகள் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

பிரதம அதிதியாக, இந்தியா கோயம்புத்தூர் ராமகிருஷ்ண மிஷன் ஶ்ரீமத் சுவாமி ஹரிவ்ரதானந்தஜீ மஹராஜ் கலந்துகொண்டு கதாப்பிரசங்கம் நிகழ்த்தினார்.
கடந்த வாரம் மலையகப்பயணத்தை வெற்றிகரமாக பூர்த்திசெய்த சுவாமிகள் இந்த வாரம வவுனியா, மன்னார் ,நானாட்டான் ,யாழ்ப்பாணம் போன்ற பிரதேசங்களுக்கு சென்று வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் இலங்கைவிஜயத்தின் 125ஆவது ஆண்டுநிறைவு விழிப்புணர்வுப்பிரசாரத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :