ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுகளில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனின் வழிகாட்டலில் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் இன்று (21.09.2021) பல சரக்கு கடைகளை இன்று பரிசோதனை செய்தனர்.
இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் வர்த்தக நிலையம் ஒன்றில் பதுக்கி வைத்திருந்த பால்மா பக்கட்டுக்கள் மீட்கப்பட்டு நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் மேற்பார்வையில் அவ் வர்த்தக நிலையத்தில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப்பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தலைமையிலான அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த பிரதேச செயலாளர் பிரிவுகளில் விசேட திடீர் சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த திடீர் சோதனை நடவடடிக்கை ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீறாவோடை, செம்மண்ஓடை, மாவடிச்சேனை போன்ற பிரதேசங்களில் சீமெந்து, பல்மா, சீனி, அரிசி, உரம், போன்ற பொருட்களை பதுக்கி வைத்துள்ள வியாபாரிகள் தொடர்பாக கண்டறியும் பொருட்டே இந்த நடவடிக்கையினை முன்னெடுக்கப்பட்டதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் தெரிவித்தார்.
பொது மக்களிடத்திலிருந்து தமக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கையின் போதே இவ்வாறு பால்மா பக்கட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு தேவையான பால்மா, சீமந்து, உரம், சீனி, அரிசி போன்ற பொருட்களை பதுக்கி வியாபார நடவடிக்கைகளை யாராவது மேற்கொள்வார்களாக இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளர் ஆர்.எப். அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment