மாத்தளை மாநகர எல்லைக்குட்பட்ட களுதாவளை ஆற்றங்கரை வீதி பாதை காப்பட் செப்பனிடும் பணி நேற்று ஆரம்பிக்கப்படடது. இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வு நேற்று சுகாதாரமுறைப்படி சம்பிரதாயபூர்வமாக நடைபெற்றது.
மாத்தளை மாநகரசபை மேயர் சந்தனம் பிரகாஷ் இவ்வீதியமைப்புப்பணியின் அங்குரார்ப்பணநிகழ்வில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டார். மாநகரசபையின் ஒன்றரைகோடி ருபா செலவிலானஇவ்வீதியமைப்புபணி ஆரம்பித்துவைக்கப்பட்டது.
களுதாவளை வரலாற்றில் முதல்தடவையாக ஒரு கார்ப்பட் வீதியாகக்கருதப்படும் இப்பணி சமயஆசாரங்களுடன் விசேடபூஜையுடன் ஆரம்பமாகியது.
கொவிட் தாக்கத்திற்கு மத்தியிலும் இத்தகைய அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவது குறித்து சமுகஆர்வலர்கள் மேயர் பிரகாஷிற்கு பாராட்டுத்தெரிவித்துவருகின்றனர்.
அத்தருணம் மாத்தளை மாநகரசபை முதல்வர் மேயர் சந்தனம் பிரகாஷ் உறுப்பினர் த.மோகன் உள்ளிட்டோரும் தொடர்ச்சியாக இச்செயற்றிட்டத்தை ஊக்குவித்துவருகின்றனர்.
0 comments :
Post a Comment