ஏறாவூர் சாதிக் அகமட் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவரும் முஸ்லீம் சமூகத்தின் விடிவெள்ளியாகவும் திகழ்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களின் 21 ஆவது ஆண்டு நினைவு தின ஹத்தமுல் குர்ஆன் ஓதுதல் அன்னாரின் சிறப்பான மறுமை வாழ்வுக்காக துஆ பிரார்த்தனை செய்தல் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றிய நினைவு உரை என்பன இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான ZA நசீர் அஹமதின் ஏற்பாட்டில் ஏறாவூரில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் அரசியல் அதியுயர் பீட மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள், உலமாக்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment