சாய்ந்தமருது வைத்திய சாலை வீதியின் முதலாம் குறுக்கு சந்தியில் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் தோண்டப்பட்ட பாரிய குழி ஒன்று பலமாதகாலமாக இன்னும் சீர்செய்யப்படாமல் காணப்படுகிறது.
இதனால் இவ்வீதியினால் பயணம் செய்யும் வாகனங்களும், பாதசாரிகளும் பெரும் அசெளகரிகத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் இப்பாரிய குழியினால் அடிக்கடி விபத்துக்களும் சம்பவிக்கின்றன. அது மட்டுமல்லாது வரும் காலத்தில் மட்டும் மழையுடன் கூடிய காலம் ஆரம்பமாக இருப்பதால் நீர் தேங்கி நின்று இன்னும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வழிகோலும் .
சாய்ந்தமருதில் மிகவும் பிரசித்தமான இவ் வீதியினை சீர் செய்வது உரிய அதிகாரிகளின் கடமையாகும். எனவே உரிய அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுத்து இவ் வீதியினை சீர் செய்து தருமாறு மக்கள் சார்பாக வேண்டுகின்றோம் .
0 comments :
Post a Comment