யாழிற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் நியமனம்



யாழ் லக்சன்-
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் இந்திய வெளியுறவு அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதராக இருந்த பாலச்சந்திரன் இசுரினாம் குடியரசு நாட்டுக்கும் அதனோடு இணைந்து மூன்று நாடுகளுக்குமான இந்தியத் தூதுவராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத்தூதராக ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், கண்டியிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பணியாற்றிவரும் நிலையில் விரைவில் யாழ்ப்பாணத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :