MBM பௌண்டேசனின் பணிப்பாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் விரிவுரையாளரும் அரசியல் ஆய்வாளருமான சட்டக் கலாநிதி முகைதீன் பாவா பௌமி அவர்கள் தனது தந்தையின் நினைவாக பல்வேறு சமூகநலப் பணிகளை மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் செய்து வருகிறார்.
அந்த அடிப்படையில் வறுமை ஒழிப்பு மன்றத்தின் வேண்டுகோளுக்கினங்க நடுஊற்று மஸ்ஜிதுஸ் ஸாலிஹு தக்கியாவின் கழிவறை புனர் நிர்மானப் பணிக்காக முதல் கட்டமாக MBM பௌண்டேசனினால் 50 000 ரூபா நிதி வறுமை ஒழிப்பு மன்றத்தின் தலைவரும் முன்னாள் நகரசபை உறுப்பினருமான உமர் அலி ரனீஸிடம் MBM பௌண்டேசனின் இணைப்பாளளர் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளாருமான இர்சாத் இமாமுதீனால் நேற்று (22) கையளிக்கப்பட்டது.
இதன்போது வறுமை ஒழிப்பு மன்றத்தின் செயலாளர் ஆசிரியர் ரனீஸும் கலந்து கொண்டார்.
நடுஊற்று மஸ்ஜித் ஸாலிஹ் பள்ளிவாசல் கழிவறையின் முழுமையான புனர்நிர்மானத்திற்காக 126 000 கோரப்பட்டிருந்தது.அடுத்த கட்டமாக மீதித்தொகை விரைவாக வழங்கப்படும் MBM பௌன்டேசனின் இணைப்பாளர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment