நிந்தவூர் தூய கரங்கள் சமூக சேவை அமைப்பினரால் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியால ஊழியர்களுக்கான ஊக்குவிப்பு அன்பளிப்பு பொருட்கள் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
கொரோனா நோய் பரவலினை நிந்தவூர் பிரதேசத்தில் கட்டுப்படுத்துவதற்காக நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr.(Ms) பறூசா நக்பர் தலைமையிலான சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அனைத்து ஊழியர்களினதும் அர்ப்பணிப்புடனான சேவைகளை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் முகமாக நிந்தவூர் தூய கரங்கள் சமூக சேவை அமைப்பினரால் அன்பளிப்பு பொருட்கள் 16/06/2021 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிந்தவூர் தூய கரங்கள் சமூக சேவை அமைப்பின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி Dr.(Ms) பறூசா நக்பர், மற்றும் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியால அனைத்து உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்
0 comments :
Post a Comment