பஸ், ரயில் சேவைகள் நிறுத்தம்!J.f.காமிலா பேகம்-
யணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, மாகாணங்களுக்குள் மாத்திரமே ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,இலங்கை போக்குவரத்து சபையின் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.இருப்பினும் நேற்று கல்முனை, அக்கரைபற்று மட்க்ககளப்பு ,போன்ற பிரதேசங்களிலிருந்து வந்த தனியார் பஸ்கள் இன்று அதிகாலை பயணிகளுடன் கொழும்பை வந்தடைந்தன.

இதற்கமைய, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை இந்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு, மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ள பின்னணியிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :