தமிழ் அரசியல்வாதிகளின் இவ்வாறான பிழையான கருத்துக்களால்தான் தொடர்ந்தும் இனப்பிரச்சினைக்கு தீர்வில்லாமல் இழுபறியில் உள்ளது.
இவ்வாறான கூற்றுக்கள் காரணமாகவே அரசாங்கங்கள் வடக்கில் அத்துமீறி சிங்கள குடியேற்றங்களை செய்து அங்குள்ள இனப்பரம்பலை மாற்ற முயல்கின்றன.
ஒரு காலத்தில் தமிழ் பேசும் மக்கள் 95 வீதம் வாழ்ந்த கிழக்கு மாகாணத்தில் தமிழ் அரசியல்வாதிகளின் இக்கூற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தை இரு மாவட்டங்களாக பிரித்து திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் சிங்கள குடியேற்றம் நடந்தது.
வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் உரியதாகும் என்பதுடன் இனப்பிரச்சினையில் முஸ்லிம்களுக்கும் தனியான தீர்வு தேவை என்பது எமது ஐக்கிய காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. அத்துடன் கிழக்கு என்பது இப்போது மூன்று இனங்களுக்கும் உரியதாகும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்திய இலங்கை ஒப்பந்தப்படி வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டு மாகாண சபை தீர்வு வழங்கப்பட்டு விட்டது. இந்த தீர்வுக்குள் எவ்வாறு இனங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என பேச வேண்டுமே தவிர மீண்டும் மீண்டும் இவ்வாறு வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம், வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற கோஷங்கள் மேலும் மேலும் இமங்களுக்கிடையில் வெறுப்பேற்றும் பேச்சாகும் என்பதை தமிழ் கூட்டமைப்பு இனவாத எம்பீக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முபாறக் அப்துல் மஜீத் முப்தி
தலைவர்
ஐக்கிய காங்கிரஸ்

0 comments :
Post a Comment